நாமக்கல் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி..
ஈரோடு. நவ. 18
நாமக்கல் மண்டலத்தில் முட்டைகளின் விலை உச்சம் தொட்டு உள்ளது. இதன் காரணமாக நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோழி பண்ணை வரலாற்றில் முதல் முறையாக, பண்ணை முட்டை கொள்முதல் விலை ஆறு ரூபாய் வரை உயர்ந்து முட்டையின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினமும். நிர்ணயம் செய்கிறது. கடந்த 2024 இல் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ஐந்து ரூபாய் 90 காசுகளாக இருந்து முட்டை வரலாற்றில் உச்ச பட்ச விளையாக இருந்து.
கடந்த 14ஆம் தேதி மீண்டும் 5 ரூபாய் 90 காசுகளை தொட்ட, நிலையில், ஐந்து ரூபாய் 95 காசுகளாக நேற்று முன்தினம் உயர்ந்து, முந்தைய விலையை முறியடித்தது.
இந்த நிலையில் நெட் மண்டல சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், முட்டையின் விலை ஆறு ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் மூலம் முதல் முறையாக முதல் முறையாக ஆறு ரூபாயை எட்டி, முட்டையின் விலை உச்சம் தொட்டு நிற்கிறது. இதன் காரணமாக பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.
அதே சமயம் ஒரு கிலோ முட்டை கோழி 112 ரூபாய், ஒரு கிலோ கறிக்கோழி 104 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
உச்சம் தொட்ட இந்த முட்டை விலை உயர்வு காரணமாக முட்டை விரும்பிகள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!