February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது
பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான பயிற்சி
அளிக்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்.

கள்ளக்குறிச்சி நவ 16

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)
நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா,
இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற முன்னணி வெளிநாட்டு பல்கலைகழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு பயில அடிப்படையான
International English Language Testing System (IELTS) சர்வதேச ஆங்கில மொழி
சோதனை முறை தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின சார்ந்த மாணாக்கர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்றரை மாதமும் விடுதியில் தங்கி
படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp