விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் பயரு வகை பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்தும், மண்வளப் பாதுகாப்பு குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வல்லம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க வைய வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை வகித்து உளுந்து, பனிப்பயறு ஆகிய பயிர்களில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது குறித்தும் உற்பத்தியை அதிகரிக்க அரசு வழங்கி வரும் திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விஜயகீதா உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் , கஸ்குட்டா எனப்படும் மஞ்சள் கொடி களை கட்டுப்பாடு குறித்தும் பேசினார் .
விழாவில்சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு ரூபாய் 60,000 மதிப்பிலான வேளாண்விசைத்தெளிப்பான்கள், உளுந்து விதைகள், தார்ப்பாய்கள், மரக்கன்றுகள் உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசுகையில்:
இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தான் திராவிட மாடல் ஆட்சியில் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலைஅறிக்கை அறிவித்து வேளாண்மை துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை செயல்படுத்தினார் அவர் வழியில் ஆட்சி செய்யும் தமிழ்நாடு முதலமைச்சர் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தைவழங்கி உள்ளார்.
மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வேளாண் திட்ட பலன்கள் சென்றுள்ளது ,வேளாண் உற்பத்தியை புதிய தொழில்நுட்பங்களையும், தரமான விதைகளையும், மானிய திட்டங்களையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனஅவர் தெரிவித்தார்.
தொடர்ந்துமன்வளம் குறித்தும் மண் மாதிரிகள் எடுப்பது குறித்தும் அதன் அவசியம் குறித்தும் வேளாண்மை அலுவலர் முருகன் எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில்தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, மொடையூர் துரை,இளம்வழுதி, கால்நடை உதவி இயக்குனர் தண்டபாணி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கௌதமன்,நிர்வாகிகள் தமிழரசன், பாண்டியராஜன், ரவிச்சந்திரன், லட்சுமணன், பழனி, கார்வண்ணன், வேளாண்மை விற்பனை துறை உதவி வேளாண்மை அலுவலர் திலகவதி, இளநிலை பொறியாளர் தணிகைவேல், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், பட்டு வளர்ச்சி துறை ஆய்வாளர் கெளரி, உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி மேலாண்மை அலுவலர்கள் தமிழரசி, ஜீவா ,வாசமூர்த்தி, அபிராமி, மஞ்சு ,மீனாட்சி, உமா ஆகியோர் செய்திருந்தனர் .
நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ் நன்றி கூறினார் .

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!