திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வி.இடையபட்டி ஊராட்சியில் உள்ள பாப்பான்குளம், நாடாங்குளம் மற்றும் வீரசமுத்திரம் உள்ளிட்ட குளங்கள் காரையாறு என்ற காட்டாற்றில் வரும் வெள்ளநீரால் நிரம்புகின்றன. இக்குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் பூசைத்தோப்பு வழியாக செல்லும் ஆற்றில் இளந்தைக் குளத்திற்குச் செல்கிறது. பூசைத்தோப்பு அருகே ஆற்றின் குறுக்கே மிகவும் அகலமான ஒன்பது கண் பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இளந்தைகுளத்திற்கு அருகே மிகவும் குறுகிய ஒருகணம் பாலமாக தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் இந்த பாலத்தின் வழியாக வெள்ளநீர் செல்ல முடியாமல் ஆற்றின் கரையை உடைத்துக் கொண்டு பூசைத்தோப்பு குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், அதேபோல் ஆற்றை ஒட்டி உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து விடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மழைகாலத்தின் போது கடந்த ஆண்டு வேளாண் நிலங்களை தண்ணீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலத்தை அகலப்படுத்தினால் தண்ணீர் ஆள்றில் வேகமாகச் சென்றுவிடும் என்பதால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகாது என்பதால் பாலத்தை அகலப்படுத்தி பெரியபாலமா கட்டித்தருமாறு கோரி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் உடனடியாக ஆற்றை தூர்வாரி கரையை பலப்படுத்துவதோடு வெள்ளநீர் வேளாண் பயிர்கள் சேதப்படுத்தாத வகையில் பாலத்தை அகலப்படுத்தி தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணப்பாறை அருகே வெள்ளநீர் வேளாண் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க ஆற்றை தூர்வாரி புதிய பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!