August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

எட்டாம் தேதி சட்டமன்றம் முடிந்ததும் நாங்கள் அனைவரும் இங்கு ஒன்று சேர்ந்து குப்பைக்கு தீர்வு காண்போம்!!!

நான் மருத்துவத்தில் டாக்டராக உள்ளேன் ஆனால்
கே ஏ செங்கோட்டையன் அரசியல் கரெக்டான ட்ரீட்மென்ட் செய்து ஆபரேஷன் சக்சஸ் அதிமுக என்ற பேஷன்ட் டெத் என அமைச்சர் அருன்ராஜ்
உரையாற்றினார்.!!

திருப்பூர்-
ஆக,25

தமிழக வெற்றி கழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..
திருப்பூர் சிவன் தியேட்டர் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.எ.செங்கோட்டையன், மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா மாநகர் மாவட்ட தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே.எ.செங்கோட்டையன் பேசுகையில்..
தமிழகத்தில் 2026 ல் வரலாறு படைத்திருக்கிற தலைவர் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்தான் தளபதி என்பதை நான் இந்த நேரில் சொல்லிக்கொள்கிறேன்.

திரையுலகத்தி உச்சகட்டத்தை அடைந்தவர் அவரை திரயுலகில் யாரும்வெள்ள இயலவில்லை. தற்போது அரசியலுக்கு வந்துள்ளர் அவர் இருக்கும் வரை அவர்தான் நிறந்தர முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்கிறேன்.

எட்டாம் தேதி சட்டமன்றம் முடிந்ததும் நாங்கள் அனைவரும் இங்கு ஒன்று சேர்ந்து குப்பைக்கு தீர்வு காண்போம்

குப்பை எல்லம் இன்றைக்கு நகர்ந்து கொண்டு போய் கொண்டு இருக்கிறது நீங்கள் கவலை பட தேவை இல்லை ஏன் என்று சொன்னால் உங்களுக்கு நன்றாக தெரியும் 60 ஆண்டுகளாம் 35 ஆண்டுகளாம் ஆட்சியில் இருந்தோம் இன்று எல்லோரையும் எதிர் கட்சி வருசையில் அமரவைத்த பெருமை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி ஒருவரால் தான் முடிந்து இருக்கிறது வேறு யாரலும் முடியவில்லை

-மக்கள் மாற்றத்தை விறும்பினர்

தமிழ்நாட்டின் வரலாற்றில் புரட்சிதலைவர் மற்றும் புரட்சிதலைவி அம்மவிற்க்கு பிறகு தமிழ்நாட்டை ஆளுகின்ற சக்தி தமிழ் மக்களுக்குப் பணியாற்றுகிற சக்தி ஒரே தலைவர் தமிழக முதல்வர் தளபதி தான்.

தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர் நாளை என்ன அறிவிக்கப் போகிறார் என்று எதிர்நோக்கியுள்ளனர்

தமிழக சட்டமன்ற நிகழ்ச்சியை ஒரு கோடி பேர் பார்க்கின்றனர். இந்தியாவில் வேற எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண் ராஜ் உறையாற்றுகையில்..

திருப்பூர் என்றாலே அன்பும் உழைப்புதான்
நடந்து முடிந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் 35 சதவீதம் பெற்று வெற்றி பெற்றது சாதாரண விஷயம் அல்ல இந்த தேர்தல் அரசியல் புரட்சிக்கான தேர்தல்

எதிர்க்கட்சித் தலைவர் நம்மளை பற்றி குறை சொல்வது போல் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் யார் என்று தெரியவில்லை அவர் பெயர் கூட தெரியாது அவர்கள் என்ன செய்து கொண்டு உள்ளார்.
என்று தெரியவில்லை என குறையாக கூறுகிறார் – உங்களை மாதிரி குறுநில மன்னர்கள் தான் அரசியலில் ஜெயிக்க முடியும் என்று நினைக்கக் கூடாது – இதுதான் சாதனை ஒரு சாமானியரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலின் ஜெயிக்கலாம் அரசியல் புனிதமான வேலை இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

கடந்த 2026க்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் இரண்டு கட்சிகளும் சரி கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு சீட்டு வாங்குவதற்கு அவ்வளவு கஷ்டம்
அந்த மாதிரி இருந்த சூழ்நிலையில் ஒரு சாமனியரும் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அதில் ஜெயிக்க கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தான் நமது அரசு தமிழக வெற்றி கழகம் நிகழ்த்திய மிகப் பெரிய சாதனை

கடந்த கால ஆட்சியில் ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாதா ஆட்சியாக இருந்தது ஆனால் நம் ஆட்சி அமைத்தவுடன் உடனடியாக யுபிஎஸ்சி சீனியர் டி படி விரைந்து டிஜிபியை நியமித்தோம்

அடுத்து மிகப்பெரிய சாதனை லஞ்சம் ஊழலை அறவே ஒழித்து உள்ளோம்

சட்டமன்றத்தில் பார்ட்டி பண்டு என்று சொன்னதும் உடனே கொதித்து எழுந்து விடுகின்றனர். ஆதாரத்தை கூட ஆதாரத்தைக் கொடு என அன்பான திமுக உறுப்பினர்கள் தலைவர்களுக்கு சொல்லிக்கிறோம் மக்கள் மன்றத்தில் நீங்கள் செய்த தவறுகளை அம்பலப்படுத்தி வருகிறோம் மக்கள் மன்றம் தான் பெரியது நீதிமன்றத்தை விட நேரலையில் சென்று கொண்டுள்ளது சட்டமன்ற நிகழ்வுகள்

நடைபெற உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும்

கடந்த காலங்களில் திமுக பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளது ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் பயப்படவில்லை ஆனால் தற்போது ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற அச்சம் வந்துள்ளது.

நான் மருத்துவத்தில் டாக்டராக உள்ளேன் ஆனால் கே ஏ செங்கோட்டையன் அரசியல் டாக்டர்
அரசியல் என்ன பிரச்சனை அதிமுகவில் என்ன பிரச்சனை என தெளிவாக தெரிந்தவர் உண்மையான கரெக்டான ட்ரீட்மென்ட் செய்து நல்ல இடத்தில் ஆபரேஷன் சக்சஸ் அதிமுக என்ற பேஷன்ட் டெத் என கொண்டு போய் விட்டார்..
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அழகாக பேசுகின்றனர் அதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் செந்தமிழில் பாட்டு பாடி பேசுகின்றனர் ஆனால் அவர்களை போல் நம் பேசுவதில்லை ஆனால் நம்மிடம் உண்மையுள்ளது

பில்டிங் ஸ்டாங்கு பேஸ் மட்டம் வீக்கு என மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினை ஊழல் பையில் தொடர்பாக பேசினார்.

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பி கே சேகர்பாபு சிவன் சொத்து குலநாசம் என கூறினார்
அது திமுகவிற்கு நடந்து விட்டது கோயில் சொத்து மட்டும் அல்ல மக்கள் வரி பணமும் சிவன் சொத்துதான் அதனால் திமுக குலநாசம் ஆகிவிட்டது என உரையை நிறைவு செய்தார்..