August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அவலூர்பேட்டையில் அன்னை லட்சுமி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை தொடக்க விழா

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் ஸ்ரீ சித்தகிரி முருகன் லயன்ஸ் கிளப் சார்பில், அன்னை லட்சுமி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளையின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீ சித்தகிரி முருகன் லயன்ஸ் கிளப் தலைவர் Ln. Dr. அருள்செல்வன் தலைமை தாங்கினார். விழாவில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்படி, அவலூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000 மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, புடவை, தையல் இயந்திரம், மிதிவண்டி, விவசாய உபகரணங்கள் மற்றும் தென்னை மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. குறிப்பாக பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவில் த.வெ.க. விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் குண. சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், அறக்கட்டளை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அன்னை லட்சுமி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொள்ளும் நோக்கம் வெளிப்படுத்தப்பட்டது.