August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இலஞ்சி பிஎட் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கலெக்டர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.

தென்காசி
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல், நடனம், கிராமிய கலை, குழு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் வட்டார அளவில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இளையோர் திறன் என்ற தலைப்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
திருவிழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை வகித்தார் மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் காதர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் விழாவை துவக்கி வைத்து மாணவ மாணவிகளின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வர தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து சிறப்புரையாற்றி மாணவ மாணவிகள் தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு சிறந்த இடங்களை பிடித்து பெற்றோருக்கும், பள்ளிக்கும், நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி பேசி மாணாக்கர்களின் படைப்பாற்றலை பார்வையிட்டார்.
சிறப்பு அழைப்பார்களாக கல்லூரி தாளாளர் ராஜகுமார், முதல்வர் (பொ) ஷீலா நவரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்