தமிழ்நாடு அரசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பணியார்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தினையும் உறுதி செய்யும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவிநாசி எஸ்.சி.எம். தனியார் தொழிற்சாலையில் தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட தொழில்மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது, தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பணியார்களின் விபரங்கள் குறித்தும், தொழிற்சாலையின் பல்வேறு நிலை பதிவேடுகள் குறித்தும், தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதிகள் குறித்தும், அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்தும், மருந்து பதிவேடுகள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேலுமணி, பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) கார்த்திகைவாசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்) பாரதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…