August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி முலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, முலக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் 48-ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று (18.08.2026) மாலை கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்குகளை ஏற்றி, அம்மனை பக்தியுடன் வழிபட்டனர்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் குடும்ப நலன், உடல் ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்வு வேண்டி அம்மனை வழிபட்டனர்.

விழாவையொட்டி கோவில் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதால் கோவில் வளாகம் பக்தி மயமாக காட்சியளித்தது.