தமிழகம் முழுவதும் 2வது நாளாக சுமைதூக்குவோர் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ரேசன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பும் பணி பாதிப்பு :
திருச்சி ஆக 19–
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்
சுமைதூக் குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய பலகட்ட போராட் டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.
அதன் படி சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்தவேண்டும். வருகைப்பதிவேட்டில் பெயர் சேர்க்கவேண்டும்.
2022 முன்தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும். 12.07.2025 முன் தேதியிட்டு நிலுவையில் உள்ள 60 சதவிதம் கூலி உயர் வையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் ஜூன் மாதத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் தொழிலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜூலை மாதத்துக்குள் அரசு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து ஜூன் மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர்.
இந்நிலையில்ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் ஆன நிலையில் தமிழக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு வார்த்தைக்கு அழைக்காத காரணத்தால் நேற்று முதல் தமிழகம் முழுவதும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்
சுமைதூக் குவோர் தொழிலாளர்கள்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இன்று 2வது நாளாக போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அதவத்தூர் திருவானைக்காவல், திருவரங்கம், மணப்பாறை, முசிறி, சமயபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் குடோன்கள் உள்ளது.இந்த குடோன்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இந்த நிலையில் போராட்டம் தொடங்கிய காரணத்தால் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் இருந்தனர்.இந்த போராட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்ட தலைவர் ரெங்கசாமி, பொருளாளர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.இன்று பணிக்கு வந்த தொழிலாளர்கள் மூட்டைகளை எடுத்து செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகத்தில் உள்ள ரேசன் கடைக ளுக்கு நுகர்பொருள் வாணிப கழக குடோன் மூலம் அரிசி,பாமாயில், கோதுமை, உள்ளிட்டவை விநியோகி க்கும் பணி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதாவது அடுத்த மாதத் திற்கு தேவையான பொருட் கள் இந்த மாத இறுதி வாரத் தில் அனுப்பப்படும். இது முன் நகர்வு எனப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் லோடு ஏற்றுவததை குறைத்து உள்ள னர். இதனால் ரேசன் கடைக ளுக்கு சரியான நேரத்தில் பொருட்கள் கொண்டு செல் லும் பணி பாதிக்க தொடங்கி உள்ளது.இதற்கிடையில் திடீரென்று வடமாநில தொழிலாளர்களை வேலையில் அமர்த்த அதிகாரிகள் முயற்சி செய்தனர் இதனை கேள்விப்பட்டுதொழிலாளர்கள் அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுமை தூக்கும் தொழி லாளர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர் சரவ ணன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…