கள்ளக்குறிச்சி நவ 11
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்த குறைதீர் கூட்டத்தில் சங்கராபுரம் பகுதியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் என்பவர் போஸ்டருடன் மனு கொடுக்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை கண்டு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த போலீசார் விசாரித்த போது அவர் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் பதிவு செய்து பாரத ஸ்டேட் வங்கி சங்கராபுரம் கிளையில் கடன் பெற்று கள்ளக்குறிச்சியில் இயங்கி வந்த தீபம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் UPCOT EV MOTORS நிறுவனத்தின் E எலக்ட்ரிக் சாரதி ஆட்டோ வாங்கியுள்ளார்.
இந்த ஆட்டோ வாங்கிய நாள் முதலே சரியான முறையில் இயங்காமல் பழுதடைந்த நிலையில் இருந்தது இதனால் ஆட்டோ ஓட்டுனர் லோகநாதன் விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தின் முறையிட்டார். இதன் மூலம் 12/7/2024 அன்று ஆட்டோ ஓட்டுநருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. அந்த தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ஆட்டோ வாகனத்தை முழுமையாக சரி செய்து சிறந்த முறையில் இயங்கும் தன்மையில் ஒப்படைக்க வேண்டும் அல்லது புதிய வாகனம் தர வேண்டும் என நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இழப்பு தொகை ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எந்தவித நடைமுறையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
ஆகவே அதே ஆணையத்தில் 28.03.2025 அன்று நிறைவேற்றுதல் மனு (EA 16/2025)
தாக்கல் செய்து நுகர்வோர் ஆணையம் எதிர்மறை தரப்புக்கு பிடிவாரண்ட் சம்மன் அனுப்பிய நிலையிலும், காவல் துறையினர் இது நாள் வரை UPCOT EV motors ஆட்டோ நிறுவனத்தாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோ ஓட்டுநரிடம் இருந்து பழுதடைந்த ஆட்டோவை பெற்றுக் கொண்டனர் . ஆனால் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் ஆட்டோ தொழிலாளியிடம் மாத தவணை கட்ட வேண்டும் என்று நெருக்கடியில் ஆளாக்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு இத்தனை நாட்கள் வருமானம் இழந்து வாழ்க்கை வாழ்வதால் சாவதா என்ற நிலைக்கு மேற்கண்ட ஆட்டோ டீலர்கள் மற்றும் நிறுவனங்கள் என்னை தள்ளி விட்டார்கள் என தெரிவித்தார். நீதிமன்றம் உத்தரவு வழங்கி 16 மாதங்கள் ஆகியும் இதுநாள் வரை மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் ஆட்டோ ஓட்டுநரை அலையவிடும் அவல நிலை இருந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் இடமும் கடந்த மூன்று மாதங்களாக மனு அளித்து நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கதா காரணத்தினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இன்று போஸ்டர் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
சேலம்,மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை – மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம்.
தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்ட அதிமுக மாநில கழக செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்திரு. ஏ. அன்பழகன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ கே டி ஆறுமுகம், திருமுருகன், மாண்புமிகு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் சுந்தர் ஆகியோர்உட னிருந்தனர்.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: குடோனுக்கு சீல், ஒரு நபர் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!புதுச்சேரி:புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலும், வடக்கு காவல் கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும், புதுச்சேரி காவல் துறையினர் சட்டவிரோத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று (ஏப்ரல் 24, 2026) மாலை 4 மணியளவில், டி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் குமரன் வீதி, எண். 22 என்ற முகவரியில் உள்ள ஒரு குடோனை, போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவசரமாக பூட்ட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் கோசாபாளையத்தைச் சேர்ந்த மாரியமுத்து (50) என்பது தெரியவந்தது. தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, அதிக லாபத்திற்காக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரது குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:கூல் லிப் (Cool Lip) – 2 பண்டல்கள்ஹான்ஸ் (Hans) – 8 பண்டல்கள்விமல் பான் மசாலா (Vimal Pan Masala) – 6 பண்டல்கள்வி1 டொபாக்கோ ஹேப்பி ஹோலி (V1 Tobacco Happy Holi) – 7 பண்டல்கள்இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு (Cr. No. 96/2026) பதிவு செய்யப்பட்டு, மாரியமுத்து கைது செய்யப்பட்டார். COTPA சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் (JJ Act) கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குற்றவாளியை விரைந்து கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.