August 1, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,02/08/2026.

சேலத்தில் இபிஎஸ் திடீர் தீவிர ஆலோசனை சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?

எடப்பாடியில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். கட்சியின் அமைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை, வரவிருக்கும் அரசியல் நிகழ்வுகள், தொகுதி வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ஆய்வு மாளிகையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, பதிலளித்த அவர், “மேகதாது தொடர்பாக நான் ஏற்கனவே விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளேன் மேலும்,டாஸ்மாக் தொடர்பான கேள்விக்கு இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விரிவாக பேச உள்ளேன்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.