கோவை ஜூலை:31
கோவை தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய கலை மற்றும் கலாச்சார அணி சார்பாக கோவை செட்டிபாளையம் பகுதியில் மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது.இந்த போட்டியினை தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜய் துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார் .
இவருடன் இணைந்து தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
500 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியினை தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி நிறுவனர் கலை மற்றும் கலாச்சார அணி ஒன்றிய அமைப்பாளர் சதீஸ் மற்றும் பயிற்சியாளர்கள் சேகர்,சபரீஷ்,பாலமணிகண்டன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..