July 31, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் ஜம்பு ஏரிக்கரை ஓரத்தில், குப்பைகள் கொட்டியும் சில சமூக விரோதிகள் ஆபத்தான மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றிருந்தனர்.​இந்நிலையில், அந்த ஏரிக்கரையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாக மாறியது. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, புகை மூட்டத்தால் கண் எரிச்சல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினர்.​இந்தப் பிரச்சனை குறித்து நமது நீதிகதீர் செய்தி நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. நீதிகதீர் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட ஊராட்சி நிர்வாகம், தீப்பற்றி எரிந்த குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் இருந்த இடத்திற்கு விரைந்தது.பாதிக்கப்பட்ட அந்த ஏரிக்கரைப் பகுதியில் உடனடியாக மண் கொட்டப்பட்டு, குப்பைகள் மற்றும் கழிவுகள் முழுமையாக மூடி அகற்றப்பட்டன. இதன் மூலம் அப்பகுதியில் பரவிய அடர்ந்த புகையும் கட்டுப்படுத்தப்பட்டது.​செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே விரைந்து நடவடிக்கை எடுக்கக் காரணமாயிருந்த நீதிகதீர் செய்தி நாளிதழுக்கு அப்பகுதி மக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.