July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி கல்வித்துறை மூலம் உப்பளம் தொகுதி பாதர் சாஹீப் வீதியில் உள்ள சி.எம் அஷ்ரப் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சட்டப்பேரவைத்
தலைவர் அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு 99 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களிடையே கற்றல் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் கவுசல்யா, கௌரி, விஜயலட்சுமி, வைஜெயந்தி, இந்து, நளினிதேவி ஆகியோர் உடனிருந்தனர்.