புதுச்சேரி ராஜ் பவன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய குறுக்கு பாலங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
இதன்படி, செஞ்சி சாலையில் அமைந்துள்ள ஜிப்மர் கிளை வளாகம் அருகில், புஸ்ஸி தெரு சந்திப்புக்கு தென்புறம் மற்றும் ரங்கபிள்ளை தெரு ரோமன் ரோலன் நூலகம் அருகில் இந்த குறுக்கு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் மொத்தம் ₹21,63,138 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இன்று காலை நடைபெற்ற இப்பூமி பூஜை விழாவில், ராஜ் பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று, இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர வாழ்த்து தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்