இதை பார்த்த கிராம மக்கள் அரசமரம் சிவன் என்றும் வேப்பமரம் பார்வதி என்றும் அதற்கு திருக்கல்யாணம் நடத்துவதென முடிவு செய்து நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி இன்று கிராம பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் பார்வதி பெண் வீட்டார் போன்று தலையில் பட்டு சேலை பட்டு வேக்ஷ்டி பழங்கள் பாத்திரங்கள் போன்று 200 க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க சீர் வரிசையாக தலையில் சுமந்து கோவில் வந்தனர்
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி வேம்பமரம் மற்றும் அரசரமரத்திற்கு திருமணம் நிகழ்வு நடத்தினர்
வேப்பமரத்திற்கும் அரசமரத்திற்கும் நடைபெறுகின்ற திருமணத்தை பார்ப்பதற்காக சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்
குறிப்பாக இந்த திருமணத்தை பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கூறப்படுகிறது
இதனால் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி பழனிவேல்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!