பெறுநர்:
- மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள்,
ஆளுநர் மாளிகை, புதுச்சேரி. - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம், புதுச்சேரி. - தலைமைச் செயலர் அவர்கள்,
தலைமைச் செயலகம், புதுச்சேரி.
பெறுநர் நகல்:
- செயலர், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை, புதுச்சேரி.
- இயக்குநர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, புதுச்சேரி.
- ஒருங்கிணைப்பாளர், CENTAC, புதுச்சேரி.
நாள்: 19-07-2026
பொருள்: http://G.O.Ms.No.16 / 14-07-2026 – விளையாட்டு ஒதுக்கீடு அரசாணையில் உள்ள அடிப்படை குறைபாடுகள், போலி விளையாட்டு சங்கங்களின் மோசடி – உடனடி திருத்தம் மற்றும் கடும் நடவடிக்கை கோரி புகார் மனு.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
வணக்கம். புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள http://G.O.Ms.No.16 / 14-07-2026, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தமான அரசாணையை தேசிய மக்கள் முன்னணி கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. அதே நேரம், இந்த அரசாணை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் பல அடிப்படை குறைபாடுகளுடன் வெளியிடப்பட்டுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, உடனடி நடவடிக்கை கோருகிறோம்.
I. அரசாணையில் உள்ள முக்கிய தவறுகள் / குறைபாடுகள்:
- சங்கங்களை முறைப்படுத்தாமல் மார்க் முறை:
ஒரு விளையாட்டுக்கு இரண்டு, மூன்று சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், “எந்த சங்கம் அதிகாரப்பூர்வமானது” என்று அரசு இதுவரை அறிவிக்கவில்லை. G.O-வில் “DS&YA அங்கீகாரம் பெற்ற சங்கம்” என்று மட்டும் குறிப்பிட்டு கைகழுவுவது, பெற்றோரை ஏமாற்றும் செயல். சான்றிதழ் வாங்கிய பிறகு “இது செல்லாது” என்று CENTAC-ல் நிராகரிப்பது மாணவர்களின் ஒரு வருடத்தை வீணடிக்கும். - “ஒரு வருடம், ஒரு சாதனை” விதி – அநீதி:
G.O-வில் “Highest achievement in an academic year will alone be considered” என்று உள்ளது. ஒரு மாணவன் ஒரே வருடத்தில் District Gold, State Silver, National Participation என 3 சாதனை செய்தாலும், ஒன்றுக்கு மட்டும் தான் மார்க். இது தொடர்ந்து கடினமாக உழைக்கும் மாணவர்களை ஊக்குவிக்காமல் தண்டிக்கும் விதி. - “5 வருடம் மட்டும்” கணக்கில் எடுப்பது:
“Continuous five years immediately preceding the year of admission” என்று உள்ளது. 9-ம் வகுப்பில் National Medal வாங்கிய மாணவன், 12-ம் வகுப்பில் காயம் காரணமாக விளையாடவில்லை என்றால் அவனது சாதனை குப்பைக்கு போகும். உண்மையான விளையாட்டு வீரனுக்கு இது அநீதி. - Open/Invitational போட்டிகளுக்கு முழு தடை:
“Open or Invitational or Memorial Championship will not be considered” என்று உள்ளது. பல கிராமப்புற மாணவர்கள் இதுபோன்ற போட்டிகள் மூலம்தான் முதலில் வெளியே வருகிறார்கள். அங்கீகாரம் இல்லாத சங்கங்களை ஒழுங்குபடுத்தாமல், போட்டிகளை முழுவதுமாக தடை செய்வது சரியல்ல. - Para Sports-க்கு தெளிவில்லை:
Para Sports-க்கு மார்க் உண்டு என்று Table-VII-ல் குறிப்பிட்டாலும், அவர்களுக்கான தனி கட்-ஆஃப், குறைந்தபட்ச 35 மார்க் விதி பொருந்துமா என்று தெளிவில்லை. - குறைந்தபட்ச 35 மார்க் விதி:
“Candidates with a minimum sports mark of 35 and above alone will be considered for ranking” என்று உள்ளது. மாநில அளவில் வெண்கலம் வென்றாலே 35 மார்க் தான். அப்படியானால் மாவட்ட அளவில் சாதித்த கிராமப்புற மாணவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவார்கள்.
II. எங்கள் கோரிக்கைகள்:
எனவே, மாணவர்களின் நலன் கருதி கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு தேசிய மக்கள் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்:
அ. சங்கங்கள் தொடர்பாக:
- “ஒரு விளையாட்டு, ஒரு சங்கம்” கொள்கை: 35 விளையாட்டுக்கும் DS&YA அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு மாநில சங்கம் எது என்று 15 நாட்களுக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்.
- போலி / போட்டி சங்கங்களை ஒழிக்க: அங்கீகாரம் இல்லாமல் சான்றிதழ் வழங்கும், பணம் வசூலிக்கும் அனைத்து போலி விளையாட்டு சங்கங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவற்றை இழுத்து மூட வேண்டும்.
- வெளிப்படை இணையதளம்: அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், நிர்வாகிகள், அந்த வருட அதிகாரப்பூர்வ Championship காலண்டர் ஆகியவற்றை DS&YA இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
ஆ. அரசாணை திருத்தம் தொடர்பாக:
- மார்க் முறை திருத்தம்: ஒரு வருடத்தில் ஒரு மாணவரின் அதிகபட்ச 3 சாதனைகளுக்கு மார்க் வழங்க வேண்டும்.
- கால வரம்பு நீக்கம்: 5 வருட வரம்பை நீக்கி, 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செய்த அனைத்து தேசிய, சர்வதேச சாதனைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
- மேல்முறையீட்டு குழு: CENTAC-ல் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால், 48 மணி நேரத்தில் மேல்முறையீடு செய்ய தனி குழு அமைக்க வேண்டும்.
- குறைந்தபட்ச மார்க்: 35 மார்க் விதியை 20 ஆக குறைத்து, மாவட்ட அளவில் சாதித்த கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இ. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை:
- தவறான சான்றிதழ் கொடுத்த சங்க நிர்வாகிகள் மீது IPC 420, 468 படி மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
- பொறுப்பை நிர்ணயித்தல்: போலி சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகளில் முதலில் விசாரணை நடத்தி, தவறு யாருடையது என கண்டறிய வேண்டும்.
- பெற்றோர்/பயிற்சியாளர்/சங்க நிர்வாகிகள் தெரிந்தே மோசடி செய்து மாணவரை பலிகடா ஆக்கியிருந்தால், அவர்கள் மீது மட்டும் குற்றவியல் நடவடிக்கை மற்றும் கல்வி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாணவர் அறியாமல் ஏமாற்றப்பட்டிருந்தால், அந்த மாணவருக்கு அந்த வருட அட்மிஷன் மட்டும் ரத்து செய்து, மோசடிக்கு உடந்தையாக இல்லை என உறுதியானால், அடுத்த வருடம் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை முற்றிலும் முடக்கும் 3 வருட தடை விதிக்கக் கூடாது.
- விசாரணைக்கு முன் எந்த மாணவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
- தகுதியில்லாத விளையாட்டை தேர்வு செய்து, பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கும் பெற்றோர் மீது விசாரணை நடத்தி, கல்வி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தேசிய மக்கள் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் மற்றும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத் தலைவர், தேசிய மக்கள் முன்னணி
இணைப்பு:
- http://G.O.Ms.No.16 / 14-07-2026 நகல்.
- அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் போலி சங்கங்களின் பட்டியல்.
- பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்