திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் அருகே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் முன்னாள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜலெட்சுமி வெங்கடேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு, மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கு லட்டு, சிக்கன் பிரியாணி, ஜில்லி பொதுமக்களுக்கும் கழக தோழர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அ.பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி வி.வி.வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் ஓந்தாம்பட்டி மணி, வழக்கறிஞர் துரைஅழகிரி, ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகராஜ், கப்பல் சதீஸ், மணிகண்டன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறை அருகே திமுக முதன்மைச் செயலாளர் பிறந்தநாளை பிரியாணி வழங்கி கொண்டாடிய திமுகவினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்