விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள பழங்குடி பள்ளி மாணவர்களிடத்தில் செஞ்சி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் பழங்குடி பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் செஞ்சி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை நிறுவனரும் செஞ்சி கிளைச்சிறை பார்வையாளருமான ஜான் சத்தியசீலன் தலைமைதாங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது :- உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் சுமார் 100 பழங்குடி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்து, ஏழாம் கட்டமாக ஆலம்பூண்டி கிராமத்தில் கல்வி உபகரணங்கள் வழங்குகிறோம். உங்களுக்கு இந்த கல்வி உபகரணங்கள் வழங்குவது சென்னையில் உள்ள உதவும் உள்ளங்கள் பப்ளிக் சாரிட்டபில் டிரஸ்ட் ஆகும். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுக்கு கல்வி தான் உயர்ந்த செல்வம் அதை நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் அனைவரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நன்றாக படித்து வாழ்வில் உயர வேண்டும். உங்கள் பெற்றோர்கள் செய்யும் தொழிலை விட்டு நீங்கள் படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும். உங்களுக்கு கல்வி சார்ந்து அனைத்து உதவிகளையும் செய்ய உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை எப்போதும் தயாராக உள்ளது என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை உறுப்பினர் சத்தியமங்கலம் தினேஷ் அவர்கள் கலந்து கொண்டு கல்வி உபகரணங்கள் வழங்கினார். உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை உறுப்பினர் ராஜேஷ் நன்றி கூறினார்.
செஞ்சி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் பழங்குடி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் :

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்