சேலத்தில் அமைச்சர் வன்னியரசு உறுதி – மூடியே கிடக்கும் அம்பேத்கர் சிலைக்கு விரைவில் திறப்பு விழா.
சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிடையே தொடர்ந்து பேசப்படும் பிரச்சினையாக உள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பியும், சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவருமான டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் இந்தச் சிலை அமைக்கப்பட்டாலும், அது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தச் சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததாக கூறப்பட்டது. சிலை அமைக்கப்பட்ட பின்னர் திறப்பு விழாவும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிலையின் வடிவமைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரு தரப்பினர் இந்த சிலையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களிடம் பேசினார். கால் மேல் கால் போட்டபடி இருப்பதால் அம்பேத்கர் சிலையை திறக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் வன்னியரசு கூறுகையில், அம்பேத்கரை ஒரு சாதிய தலைவராக சுருக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். சிலைகளை திறக்க முடியாத நிலை தமிழகம் முழுவதும் இருப்பதாக கூறியுள்ளார். சேலத்தில் மூடி வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிடையே தொடர்ந்து பேசப்படும் பிரச்சினையாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பியும், சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவருமான டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் இந்தச் சிலை அமைக்கப்பட்டாலும், அது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்