July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் தனுகா நிறுவனத்தின் நெல் விவசாயிகள் கருத்தரங்கம்

செஞ்சி ஜுலை 19

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் தனுக்கா நிறுவனம் சார்பில் நெல் விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தனக்கா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் முத்துக்குமார் தலைமை தாங்கி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

விவசாயிகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கத்துடன் நிலையான வேளாண் தீர்வுகளை தனுகா அக்ரிடெக் நிறுவனம், வழங்கி வருகிவரும் நிலையில்
செஞ்சியை சேர்ந்த பல்வேறு கிராம நெல் விவசாயிகள் பங்கேற்ற விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நெல் சாகுபடிக்காக தனுகா நிறுவனத்தின் புதிய களைகள் முளைப்பதற்கு முன்பு கட்டுப்படுத்தும் களைக்கொல்லியான தினகர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏக்கருக்கு 200 மில்லி என்ற அளவில் பயன்படுத்தப்படும் இந்த களைக்கொல்லி, புல்வகை களைகள், கோரை வகை களைகள் மற்றும் அகன்ற இலை களைகளை முளைக்கும் நிலையிலேயே திறம்பட கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் களை எடுக்கும் தொழிலாளர் செலவு குறைவதுடன், நீண்டகால களைக் கட்டுப்பாடும் கிடைக்கிறது. மேலும், ஒரு ஏக்கருக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை செலவு சேமிக்க முடியும் எனவும் மைக்கோர் சூப்பர் உயிரியல் உரம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்
விழுப்புரம் விற்பனை அலுவலர் பன்னீர், மற்றும் செஞ்சி வட்டார களப்பணியாளர் நிரஞ்சனா, ஆகியோர் கலந்து கொண்டு, தனுகா நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜோலதாஸ் தமிழ்நாடு விவசாயம் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கம் மாநில பொதுச்செயலாளர் அறவாழி செஞ்சி ரோட்டரி சங்க இளங்கோவன் விவசாய அணி செஞ்சி வட்டாரத்தில் அன்புச் செழின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்