July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி பிரபல தொழிலதிபர்கள் மீது பல கோடி ரூபாய் சொத்து மோசடி புகார்… பெரியகடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்களான லூயிஸ் சின்னையா ஆரோக்கியசாமி, லூயிஸ் பிரகாசம் கன்னையா, விக்டர் சின்னையா ஜெயக்குமார் மற்றும் விக்டர் விஜய் ராஜ் ஆகியோர், 1933-ஆம் ஆண்டு உயிலில் தேவாலயத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்தை மறைத்து, போலி ஆவணங்கள் மற்றும் தவறான தகவல்களின் அடிப்படையில் விற்பனை செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மோசடியில் ஈடுபட்டதாக பெரியகடை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளார்

.

புகாரில், வங்கிக் கடன் பெற முயன்றபோது சொத்தின் உரிமை தொடர்பாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த சொத்து தேவாலயத்திற்கு வழங்கப்பட்டிருந்தது தெரியவந்ததாகவும், இதை மறைத்து தனக்கு விற்பனை செய்ததுடன், இதேபோல் பல சொத்துகளையும் விற்று மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெரியகடை காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.