July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்: புதுச்சேரியில் மகளிர் மகாஜன சங்கம் சார்பில் மரியாதை

புதுச்சேரி, ஜூலை 15:

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுச்சேரி நாடார் மகளிர் மகாஜன சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர். சங்கத்தின் தலைவி T. பேச்சியம்மாள் தலைமையில், செயலாளர் S. லட்சுமிதேவி, பொருளாளர் K. கஸ்தூரி, துணைத் தலைவி M. ராமலட்சுமி, துணைச் செயலாளர் M. பூங்கொடி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி, ஜீவா திரையரங்க வாயிலில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மகளிர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து, தங்களது வீர வணக்கத்தையும், புகழஞ்சலியையும் செலுத்தினர்.