சங்கராபுரம் ஜூலை 16
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளியில் பயின்று தற்போது அரசுப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து, கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு “நலிவடைந்த மக்கள் மன்ற அறக்கட்டளை” என்ற அமைப்பை தொடங்கினர்.
தாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு ஏதாவது பயனுள்ள சேவையை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், அப்போது ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்திருந்தனர்.
அந்த நிலத்தை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், போதிய நிதி வசதி இல்லாததால், தாட்கோ மூலம் கிராம அறிவுசார் மையம் அமைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து சுமார் 30 சென்ட் நிலத்தை தாட்கோவிற்கு தானமாக வழங்க அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இந்த நிலத்தில் கட்டப்படவுள்ள கிராம அறிவுசார் மையம், அரசம்பட்டு கிராம மக்களின் குடும்ப நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள், சமூக மற்றும் பொதுநல நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக செயல்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது. எனவும்
இதற்கான தான செட்டில்மெண்ட் பத்திரம் இன்று சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் பிறந்த கிராமத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதன் ஒரு பகுதியாக ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது” என்றனர்.
மேலும், அறக்கட்டளைக்கு சொந்தமான மீதமுள்ள நிலத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு எப்போது வேண்டுமானாலும் வழங்கத் தயாராக உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த உயரிய செயலை அறிந்த அரசம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், நலிவடைந்த மக்கள் மன்ற அறக்கட்டளை நிறுவனர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்