புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம், சங்க அலுவலகத்தில் தலைவர் Dr. A.D. பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சங்கத்தின் நிறுவனர் அட்வகேட் டாக்டர் மனோகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவது, வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை கடந்த ஆண்டைவிட சிறப்பாக கடற்கரை பகுதியில் நடத்துவது, பள்ளி மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு குடிநீர், பிஸ்கட், வாழைப்பழம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சங்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திட்டங்கள் தொடர்பாகவும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சிவா மணிகண்டன், பொருளாளர் வி. தங்கப்பிரகாசம், அமைப்புச் செயலாளர் அஷ்ரப் தீன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர். பரணிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நன்றி.
புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கம்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்