July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,10/07/2026.

சேலம் மக்களுக்கு இனி 24 மணி நேரமும் குடிநீர் வசதி – முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.

சேலம் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையவுள்ள இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:

திட்டத்தின் நோக்கம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 10.83 லட்சம் (10,83,506) மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்குதல்.

திட்ட மதிப்பு: ஆரம்பத்தில் ₹758.13 கோடியாக இருந்த இத்திட்டத்தின் மதிப்பு, தற்போது ₹1,035.81 கோடியாக திருத்தியமைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிறுவனம்: இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் பராமரிக்கவும் M/S. SUEZ Project International Private Limited என்ற சர்வதேச நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பணிகளுக்கான டைம்லைன்:

முதல் ஆண்டு: தற்போதுள்ள குடிநீர் உட்கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்படும்.
அடுத்த 4 ஆண்டுகள்: புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் ₹1,035.81 கோடி மதிப்பில் நடக்கும்.
அடுத்த 25 ஆண்டுகள்: குடிநீர் விநியோகத்தை சீராகத் தொடரவும், பராமரிக்கவும், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும் இந்நிறுவனத்திற்கு ₹3,258.73 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது.
நிதிப் பங்கீடு:

மத்திய அரசின் அம்ரூட் (AMRUT 2.0) திட்டம் – ₹227.44 கோடி
தமிழ்நாடு அரசு – ₹393.92 கோடி
ஒப்பந்த நிறுவனம் – ₹414.25 கோடி
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்.

சேலம் மாநகராட்சியில் குடிநீர் உட்கட்டமைப்புகளை சீரமைப்பு செய்தும், புதிய உட்கட்டமைப்புகளை உருவாக்கியும், சேவம் மாநகரில் வசிக்கும் 10,83,506 மக்கள் பயன்பெறும் வகையில் மாநகரம் முழுவதும் 24 மணி நோமும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை எண், GO (MS) NO.39 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA2) துறை மூலம் நாள் 08.03.2024-ன்படி மதிப்பீட்டு தொகை ரூ.758.13 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி ஒப்பந்தப்புள்ளி கோரி பல கட்டங்களில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு சூறைந்தப்பட்சு ஒப்பந்த புள்ளி அளிந்த M/S.SUEZ Project International Private Limited என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தினை நிறைவேற்ற சேலம் மாநகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியதன் பேரில் மேற்படி நிறுவனத்திற்கு ஏற்பளிப்பு கடிதம் (LO)08.02.2026 அன்று வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீட்டிடின்படி ரூ.1035.81 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை எண். G.O. (4D) NO.10 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MCS) துறை நாள்: 04.08.2026 அன்று வெளியிடப்பட்டது.

மேற்காணும் தொகையில் ரூ.22744 கோடி இந்திய அரசால் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழும். ரூ.393.92 கோடி தமிழ்நாடு மாநில அரசால் பங்களிப்பு செய்யவும், மீதமுள்ள ரூ.414.25 கோடி தொகை இத்திட்த்தினை செயலாக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பங்களிப்பு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது.