திருச்செங்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்ராஜ் திறந்து வைத்தார்..
திருச்செங்கோடு. ஜூலை. 10
திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகத்தை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்ராஜ் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மையப் பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் மருத்துவ பயனாளிகளுக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில், புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகம், திருச்செங்கோடு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு இருந்தது.
இந்த ஆய்வகத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் திறந்து வைத்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக, மருத்துவமனைக்கு வரும் மருத்துவ பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து, அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்