July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு சிக்கைய அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சாந்தா தேவி பங்கேற்று உரையாற்றினார்..

ஈரோடு. ஜூலை. 10

ஈரோடு சிக்கைய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிக்கைய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்றைய மாணவ, மாணவிகள் சமூகப் பொறுப்புடனும், சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் எடுக்கவும் நிகழ்ச்சியில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தா தேவி மற்றும் மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கருத்துக்களை முன்வைத்து பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.