கிருஷ்ணகிரி:
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தொழிற்சங்க கூட்டம் இன்று கிருஷ்ணகிரி தமிழக வெற்றி கழக அலுவலகத்தின் அருகில் உள்ள டான்சியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஒன்றாம் தேதி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் அரசு ஏற்கனவே வழங்கிய 16 சதவீத ஊதிய உயர்வு, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாயம் எட்டு மணி நேர வேலை, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வேலை இழந்த தொழிலாளருக்கு மீண்டும் அதே நிலையானைபடி பிழைப்பு ஊதியத்துடன் வேலை போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாதந்தோறும் ஒன்றாம் தேதி வழங்க வேண்டிய சம்பளம் ஆறாம் தேதி ஆகிய இன்று வரை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் எடுப்பதாக தொழிற்சங்கத்தின் சார்பாக மண்டல செயலாளர் சாந்தகுமார், மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
தொடர்ந்து, மாவட்டத்தின் வரவு செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் ஜெயவேல் கூட்டத்தில் சமர்ப்பித்தார். மேலும் பல தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொழிற்சங்கத்திற்கு போராட்டம் எடுப்பதாக ஆதரவு தெரிவித்து கூட்டம் நிறைவு செய்தார்கள்.
செய்தியாளர் முபாரக்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்