திண்டுக்கல், ஜூலை 7 –
‘2025 டிச.31 வரை சி.பி. எஸ்., திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் மாதாந்திர பிழைப்பூதியம் வழங்கிட 2026 ஜூன் 16ல் வெளி யான அரசாணையில் (எண்.111ல்) திருத் தம் கொண்டு வர வேண்டும். என, தமிழ்நாடு ஓய்வு பெற்ற சுகாதார ஆய் வாளர்கள் சங்கம் வலியு றுத்தி உள்ளது.
அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யில் கூறியதாவது: 2026 ஜனவரி 9ல் தமிழக அரசு
டேப்ஸ்’ திட்ட அறிமுக அரசாணையை (எண்.7) வெளியிட்டது. அதில், 2025 டிச.31 வரை சி.பி. என, எஸ்., திட்டத்தில் ஓய்வு பெற்றவர்க ளுக்கு, பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதியளிக் கப்பட்ட மாதாந்திர உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. தமிழக அரசு 2026 ஜூன் 16ல் மீண்டும் மறு வரையறை அரசாணை (எண். 111) வெளியிட்டது. அதில் 2026 ஜனவரி 1க்கு முன்பு ஓய்வு பெற்றவர்க ளுக்கு எவ்வித மாதாந்திர
பிழைப்பூதியமும் வழங் கப்படாது என, தெரிவிக் கப்பட்டிருந்தது. இதனால் 2025 டிச.31க்கு முன் கட்டாய சி.பி.எஸ்., திட் டத்தில் ஓய்வு பெற்ற 56 ஆயிரம் அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் சிரமப்படுகிறோம். அதனால் பாதிக் கப்பட்ட அவர்களுக்கு , கணிசமான ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் ஜூன் 16ல் வெளியான அர சாணையில் (எண்.111ல்) திருத்தம் கொண்டு வர வேண்டும். பிழைப்பூதி யம் இன்றி தவிக்கும் குடும் பத்தினர் பயன் பெறுவர். இதனால் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண் டும்., என தெரிவித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்