புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கூத்தாடிவயல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அவரது வானத்தை நரிக்குறவர் பழங்குடியின மக்கள் திடீரென முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமானம் திட்டம் சார்பாக கூத்தாடிவயல் பகுதியில் 190-க்கும் மேற்பட்ட அரசு சார்பில் தங்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், வீடுகள் கட்டும் போதே சுவர்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், வீட்டு கட்டுமானப் பணிகளுக்காக கூடுதல் பணம் கேட்கப்படுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான தீர்வு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த திடீர் முற்றுகை சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
செய்தியாளர் பழனிவேல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்