July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூரில் பின்னலாடை சரக்குகளை வாங்கிக் கொண்டு நாலு கோடியே 93 லட்சம் ரூபாய் மோசடி — பாதிக்கப்பட்டவர்மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத் தரக் கூறி மனு !

திருப்பூர் -ஜூலை:05

திருப்பூர் சேர்ந்த பாண்டிச்செல்வி இவர் மன்னரைப் பகுதியில் கடந்த 7 வருடங்களாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாண்டி செல்வி திருப்பூரில் தனது நிறுவனத்தில் தயாரிக்கும் பின்னலாடை ரகங்களை மும்பையில் உள்ள., ( GROWYOO யோ ) நிறுவனத்தை சேர்ந்த சுபின் மித்ரா மற்றும்
பிரதீப் திவாரி ஆகிய இருவருக்கும் அனுப்பி வந்துள்ளனர். கடந்த ஒரு வருடங்களாக பாண்டிச்சேரி அனுப்பி வந்த பின்னலாடை சரக்குகளுக்கு பணம் செலுத்தி வந்தவர்கள். அதன் பின் பணத்தை அணைக்காமல் இரண்டு மாதம்., மூன்று மாதம் என்று காலம் கடத்தி வந்தவர்கள்
, தற்போது நாலு கோடியே 93 லட்சம் ரூபாய்க்கான பின்னலாடை சரக்குகளை வாங்கிக்கொண்டு பணத்தை கொடுக்காமல் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து வந்துள்ளனர் , தற்போது பணத்தை தர முடியாது என்றும் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து கொள் என்று கூறியுள்ளார் இதனால் மனமுடைந்த பாண்டிச் செல்வி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்,
தனக்கு பணத்தை தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் சுபின் மித்ரா மற்றும்
பிரதீப் திவாரி ஆகிய இருவரிடமிருந்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அதேபோல், திருப்பூரில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவன உரிமையாளர்களை இதே போல் இவர்கள் இருவரும் ஏமாற்றி உள்ளதாகவும்., அவர்கள் வெளியில் சொன்னால் தங்களது பின்னலாடை நிறுவனங்களின் பெயர் கெட்டுவிடும் என்ற காரணத்தினால் அவர்கள் புகார் அளிக்க வராமல் இருப்பதாக தெரிவித்தவர், காவல்துறையும் தமிழக அரசும் இந்த பணத்தை மீட்டு தராவிட்டால் தற்கொலை செய்வது தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.