வந்தவாசி, ஜுலை 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி மற்றும் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இணைந்து ‘நெகிழி இல்லா நகரை உருவாக்குவோம்’ சிறப்பு நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர். இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை அ.ஷமீம் பேகம் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் எஸ்.ராமலிங்கம், எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா மாவட்ட பொறுப்பாளர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை சி.கங்கா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி நகராட்சி ஆணையர் ஜே.வீர வாஞ்சிநாதன் பங்கேற்று, சுற்றுப்புற தூய்மையை பற்றியும், நெகிழி பொருட்களை பயன்படுத்தாமல் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினார். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மஞ்சப்பை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர் பி.பிஜான் முகமது அலி, ஆசிரியர் பயிற்றுனர் திருவேங்கட லட்சுமி, குறும்பட துணை இயக்குனர் முகமது ஜியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை நல் நூலகர் ஜா.தமீம் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். இறுதியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அப்சர் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்