July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சியில் பரபரப்பு சம்பவம்

கஞ்சா பயன்படுத்துவதை தட்டிக் கேட்ட டிரைவரை ஒட ஒட – விரட்டி அரிவாள் வெட்டு

கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு :

திருச்சி ஜூலை 1-

திருச்சி எடத்தெரு கல்லுக்காரத் தெருவை சேர்ந்தவர் பாலாஜி டிரைவரான இவர் அந்த பகுதியில் நேற்று 4, 5 வாலிபர்கள் நின்றுக் கொண்டு கஞ்சா குடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக சென்ற பாலாஜி அவர்களை தட்டி கேட்டுக் உள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா கும்பல் பாலாஜியை சரமாரியாக தாக்கினர். பிறகு தாங்கள் மறைத்து வைத்திருந்த கதஇதனைப் பார்த்து பாலாஜி
அங்கிருந்து தப்பித்து ஓடவே அவரை துரத்திய அந்த கும்பல் அரிவாளால் வெட்டி அவரை தொடர்ச்சியாக கல் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர் இதில் பலத்த காயமடைந்த பாலாஜி ரத்தம் வடிந்த படி போலீஸ் நிலையத்திற்கு அச்சத்தில் பாலக்கரை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாலாஜி கூறும் பொழுது
தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் கல்லுக்கார பகுதியில் கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர் ஏற்கனவே அவர்களை தட்டிக் கேட்டுள்ளோம் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் ஆனால் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் தான் நேற்று அவர்கள் கஞ்சா பயன்படுத்திய பொழுது ஏன் இங்கு வந்து கஞ்சாவை பயன்படுத்துகிறீர்கள் என கேட்டேன் அப்பொழுது அவர்கள் என்னை சரமாரியாக தாக்கி விட்டனர் காவல் நிலையத்திற்கு அருகே வைத்து என்னை அவர்கள் வெட்டினார்கள் இருந்தபொழுதும் எந்த காவலர்களும் என்னை காப்பாற்ற வரவில்லை நானாக ஓடி சென்று காவல் நிலையத்தை தட்டி காவலர்களை வரவழைத்தேன். என்னைஅரிவாளால் வெட்டிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார் எனவே காவல்துறையினர் இதில் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பழக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் உடனடியாக இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது திருச்சியில் கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது ப