தூங்கு ராஜா தூங்கு
ஓடி ஓடிக் களைத்தவனே
கலையாத உறக்கத்தில்
கனவுகளற்ற உறக்கத்தில்
ஓய்வுகொள்
மண்ணை இழுத்துப் போர்த்துப்
படுத்திருக்கும் உன்னை
குளிரோ மழையோ
வெயிலோ புயலோ
ஒன்றும் செய்யாது
நலம் கேட்க வந்த நான்
நல்லசெய்தி
கொண்டுவரவில்லை
இதே இடத்தில்
என்னோடு நின்று
இறுதி மரியாதை செலுத்திய
உன் சீடன்
உனைத்தேடி வந்துவிட்டான்
ஜோடிக் குதிரைகளை இழந்து
கவிழ்ந்து கிடக்கிறது
கலைத்தேர்
கடமை இருக்கிறது
இந்த மண்ணகத்தில்
உனக்கொரு மணிமண்டபம்;
அரசுக்குக்
கோரிக்கை வைக்கிறேன்
முதலமைச்சர் விஜயைச்
சந்திக்கவும் தயங்கமாட்டேன்
இந்த இடம்
கலைக்கோயிலாக
என்று கட்டப்படுமோ
அன்று
தேனி மாவட்டம் முழுக்க
தேவர்கள் பூச்சொரிவர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்