July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் மற்றும் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் இணைந்து தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியை வருகின்ற ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை புதுச்சேரியில் நடத்துகிறது இதனை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் நிறுவனர் திருவேங்கடம் மற்றும் தலைவர் பழனி ஆகியோர் பேசும்போது…

புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் இணைந்து 13 வது ரேங்கிங் ஓபன் நேஷனல் ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டியை வருகின்ற ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஸ்கேட்டிங் ரிங்கில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 6 முதல் 8 வயது வரை 8 முதல் 10 வயது வரை, 10 முதல் 12 வயது வரை, 12 முதல் 15 வயது வரை, 15 முதல் 18 வரை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என்ற பிரிவுகளில் நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட அவர்கள்

இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1500 ஸ்கேட்டர்கள் பங்கேற்க உள்ளனர் இது நாட்டின் மிகப்பெரிய கேட்டினங் நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த போட்டியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைப்பதாகவும் அவர்கள் குறிப்பு தெரிவித்தனர்.

ஏட்டியின் முன்னதாக சாம்பியன்ஷிப் போட்டியின் அதிகார பூர்வ லோகோ புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிர்வாகிகளால் வெளியிடப்பட்டது.

பேட்டியின் போது பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் பொதுச் செயலாளர் தாமஸ் பொருளாளர் செந்தில் குமார் துணைத் தலைவர் தனஜெயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.