July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு: கிருஷ்ணகிரி ‘சிங்கப் பெண்’ காவல் உதவி ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை!போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பர்கூர் உட்கோட்டம், நாகரசம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கூரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பாலேகுளி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட “சிங்கப் பெண்” காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா தலைமை தாங்கினார். அவரது தலைமையிலான போலீஸ் குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தற்காலச் சூழலில் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.குறிப்பாக, பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக 1091 என்ற இலவச உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அதிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நாகரசம்பட்டி உளவுப் பிரிவு சி.ஐ.டி (CID) மூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். காவல்துறையின் இந்த அதிரடி விழிப்புணர்வு முயற்சி, பொதுமக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.