July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் அய்யனார் கோவில் குதிரை எடுப்பு ,சுமார் 23,அடி உயர மண் குதிரையை பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றனர்.

அறந்தாங்கி ஜூலை 1
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயல் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. கிராம காவல் தெய்வமான அய்யனாருக்கு ஆண்டுதோறும் கூத்தாடிவயல் கிராம மக்கள் குதிரை எடுத்து வழிபாடு நடத்துகின்றனர்,

. குதிரை எடுப்பு விழாவிற்காக அறந்தாங்கி வேளார் தெருவில் உள்ள வேளாளர்களிடம் குதிரைகள் செய்யப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக கூத்தாடிவயல் அய்யனார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்,

அதேபோல் இந்த ஆண்டு சுமார் 23, அடி உயரம் உள்ள மண்குதிரை மற்றும்,20,க்கும் மேற்ப்பட்ட சிறிய குதிரை சிலைகளை அறந்தாங்கி வேளார் சமூகத்தினர் மூலம் செய்து அங்கிருந்து கூத்தாடிவயல் கிராமத்தினர் மேலதாளம் முழங்க அறந்தாங்கி நகர் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். குதிரை எடுப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு குதிரைகளை சுமந்து சென்றனர், அதனை தொடர்ந்து கூத்தாடிவயல் அய்யனார் கோவிலில் குதிரைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் பழனிவேல்