July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

செஞ்சி, ஜூலை 10:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 04.10.2023 அன்று, செஞ்சி அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா, குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகினார். செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி விசாரணை அதிகாரியாக செயல்பட்டார்.