மாவட்டச் செய்திகள் 1 min read Facebook WhatsApp Post navigation Previous காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை ஆய்வியல் நிறுவனம்தன்னாட்சி நிறுவனம் – புதுச்சேரி / NIRF தரவரிசையில் 51-வது இடம்’ஒரு செடி – ஒரு உறுதிமொழி’மரக்கன்று நடும் இயக்கம் – 14/05/2026Next திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா ஏலமனம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், அரசு தடை விதித்திருந்தாலும், தேங்காய் சிரட்டையை எரித்து கொட்டாங்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை பல மாதங்களாக செயல்படுவதாகவும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் தேங்காய் சிரட்டையின் மூலம் கார்பன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தடைசெய்யுமாறு இத்தொழிற்சாலை தற்போது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் தெரிய வருகிறது.இந்த தொழிற்சாலை, மலைக்கரடுகளின் அருகில் செயல்படுவதால், அப்பகுதி விவசாய நிலங்களுக்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் நீர்நிலையிலிருந்தே தண்ணீரை பெறுகின்றன. எனவே, தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை, நச்சு வேதிப்பொருட்கள் ஆகியவை நீர்நிலைகளில் கலக்கும்போது அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் விவசாய நிலங்களின் வளத்திற்கும் வனப்பகுதிக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் தாலுகா மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது. More Stories 1 min read மாவட்டச் செய்திகள் கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..! 1 min read மாவட்டச் செய்திகள் அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு. 1 min read மாவட்டச் செய்திகள் மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்