June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா ஏலமனம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், அரசு தடை விதித்திருந்தாலும், தேங்காய் சிரட்டையை எரித்து கொட்டாங்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை பல மாதங்களாக செயல்படுவதாகவும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் தேங்காய் சிரட்டையின் மூலம் கார்பன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தடைசெய்யுமாறு இத்தொழிற்சாலை தற்போது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் தெரிய வருகிறது.இந்த தொழிற்சாலை, மலைக்கரடுகளின் அருகில் செயல்படுவதால், அப்பகுதி விவசாய நிலங்களுக்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் நீர்நிலையிலிருந்தே தண்ணீரை பெறுகின்றன. எனவே, தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை, நச்சு வேதிப்பொருட்கள் ஆகியவை நீர்நிலைகளில் கலக்கும்போது அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் விவசாய நிலங்களின் வளத்திற்கும் வனப்பகுதிக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் தாலுகா மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது.