மே.4கில் பதிவு செய்யப்பட்ட தீர்ப்பு தெரியவரும்…
ஈரோடு. ஏப்ரல். 25
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் வெற்றி பெறும் கட்சிகள் எவை என்று மே 4கில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 17 வது பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவுடன் முடிவடைந்து உள்ளது. இதில் பதிவான வாக்குகள் மே நான்காம் தேதி என்ன பட இருக்கிறது. அன்றைய தினம் களத்தில் நின்று போராடிய அரசியல் கட்சிகளின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு புறமும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும் களத்தில் நின்று மக்களை சந்தித்தனர்.
இதற்கிடையே சீமானின் நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், ராமதாஸ் சசிகலா ஆகியோரின் கூட்டணி என தமிழக தேர்தல் களத்தில் தங்களின் பங்கிற்கு களம் காணுகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு என்பது விறுவிறுப்பாகவும், இதுவரை இல்லாத மிக அதிக அளவிலான வாக்குப்பதிவாகவும் இருந்துள்ளது.
அந்த வகையில் ஈரோடு மேற்கு தொகுதியில் = 89.80 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் = 87. 95, மொடக்குறிச்சி தொகுதியில் = 90.34, பெருந்துறை தொகுதியில் 92 47, பவானி தொகுதியில் 91.96, அந்தியூர் தொகுதியில் 88. 15, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 90.74, பவானிசாகர்( எஸ்சி } தொகுதியில்= 89.53, என இந்த எட்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியுள்ளது.
அந்த வகையில் மாவட்டத்தின் மொத்த சராசரி வாக்குப்பதிவு = 90.10 சதவிகிதம் என ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு தொகுதிகளில் கூடுதலான வாக்குப்பதிவு என்பது பெருந்துறை தொகுதியில் பதிவாகியுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ச. கந்தசாமி தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் பள்ளி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் இந்த 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தொடர்ந்து எட்டு தொகுதிகளிலும் மக்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட 100 சதவிகித வாக்குப்பதிவு என்பது கிட்டத்தட்ட நெருங்கி 90.10% வாக்குப்பதிவு பதிவாகி இருப்பது, ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்க வேண்டும்.
நீதி கதிர் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் தினந்தோறும் மாவட்ட நிர்வாகத்தின் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.