பிச்சைக்காரன்பேட்டில் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிச்சைக்காரன்பேட் பகுதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ எல்லை புற்று காளியம்மன் ஆலய மாசி பெருவிழா மிகுந்த பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ எல்லை காளியம்மனுக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து புற்று காளியம்மனுக்கு விசேஷ தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் சாமி சாவே வார்த்தையில் எழுந்தருளி உற்சவமாக ஊர்வலமாக நடத்தப்பட்டது.
மேலும் விழாவின் ஒரு பகுதியாக அக்னி சட்டி எடுத்தல் மற்றும் கும்பம் கொட்டுதல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூக சேவகி முனைவர் லாவண்யா அம்மா கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழா நிறைவில், கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சமூக சேவகி முனைவர் லாவண்யா அம்மாவிற்கு அனைவரும் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!