மணப்பாறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜூலை 2025
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், முல்லிப்பாடி கிராமத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் (DKSHA) தொண்டு நிறுவனம், 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ஏழை, எளிய மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான முன்னேற்றத்திற்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, கல்வி, உடல் மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, டிக்ஷா நிறுவனம் கார்னர்ஸ்டோன் குழந்தைகள் இல்லம் (Cornerstone Children’s Home) என்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தை நிறுவி, 2018ஆம் ஆண்டு வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 116-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கியது.





2019ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு குழந்தையும் தனது குடும்பச் சூழலில் அன்புடனும் பாதுகாப்புடனும் வளர வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகள் இல்ல மையப்படுத்தப்பட்ட சேவையிலிருந்து குடும்ப வலுப்படுத்தல் (Family Strengthening) மற்றும் குடும்ப அடிப்படையிலான மாற்றுப் பராமரிப்பு (Family-Based Alternative Care) என்ற அணுகுமுறைக்கு தனது சேவைகளை மாற்றியது. மேலும், குடும்ப அடிப்படையிலான மாற்றுப் பராமரிப்பு (Family-Based Alternative Care) திட்டத்தின் கீழ், டிக்ஷா (DKSHA) தொண்டு நிறுவனம் தற்போது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களில் வசிக்கும் 166 ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள், அவர்களது உடன்பிறப்புகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முழுமையான ஆதரவு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
தற்போது, மணப்பாறை வட்டத்தில் உள்ள மலையடிப்பட்டி மற்றும் வேங்கைக்குறிச்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளில் குழந்தைகள் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகள் (Prevention) மற்றும் கேட் கீப்பிங் (Gatekeeping) பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
டிக்ஷா நிறுவனத்தின் முக்கிய சேவைகள்:
கிராமங்களில் குழந்தைகள் நாடாளுமன்றங்களை அமைத்தல்.
இலவச மாலை நேர பயிற்சி மையங்களை நடத்துதல்.
அரிசி, உணவு மற்றும் சத்துணவு உதவிகள் வழங்குதல்.
வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் வழங்குதல் – Sewing machines, Goats and milking cows.
பெற்றோருக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்.
குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்.
அரசு நலத்திட்டங்கள் கிடைக்காமல் உள்ள தகுதியான குடும்பங்களுக்கு அவற்றை பெற்றுத் தர உதவுதல்.
இந்த சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், மலையடிப்பட்டி மற்றும் ஆவாரம்பட்டி கிராமங்களில் இரண்டு இலவச மாலை நேர பயிற்சி மையங்களை டிக்ஷா நிறுவனம் தொடங்கியது.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் புதிய கல்வியாண்டைத் தொடங்கியதை முன்னிட்டு, புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அருட்தந்தை விக்டர் ஜெயபாலன் மற்றும் டிக்ஷா (DKSHA) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஐசக் அருளப்பன் ஆகியோர் முன்னிலையில், பயிற்சி மையங்களில் பயிலும் 55 மாணவர்களுக்கு ரூ.27,000 மதிப்பிலான பள்ளிப் பைகள், எழுதுபொருட்கள் மற்றும் பென்சில் பவுச்கள் வழங்கப்பட்டன.
இந்த உதவி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் கல்விச் செலவைக் குறைப்பதோடு, மாணவர்கள் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தங்கள் கல்வியைத் தொடர ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டிக்ஷா நிறுவன ஊழியர்களான திரு. தாமஸ் வில்லியம், திருமதி வனிதா, திருமதி நகோமி ரேச்சல், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினர்.
குடும்பங்களை வலுப்படுத்துதல், குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பான, அன்பான குடும்பச் சூழலில் ஒவ்வொரு குழந்தையும் வளர்வதற்கான வாய்ப்பை உருவாக்குதல் என்ற தனது உயரிய இலட்சியத்தை டிக்ஷா நிறுவனம் இத்தகைய சமூகநலத் திட்டங்கள் மூலம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்