February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பரங்குன்றம் தீபா தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதியரசர் திரு. ஜி.ஆர். சாமிநாதன் அவர்களின் உத்தரவை எதிர்த்து, இந்து விரோத திமுக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. விசாரணை முடிவில், இன்று தீபத் திருவிழாவின்போது தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் ஆணையிட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்று, ராஜா தியேட்டர் சிக்னல் அருகே அனைத்து முருக பக்தர்கள், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கொண்டாட்டம் மாநிலத் தலைவர் திரு .ராமலிங்கம் (Ex-mla) அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. கல்யாணசுந்தரம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பாஸ்கர், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் திரு முருகையன் , திரு. மணிவண்ணன், VHP பொறுப்பாளர் திரு. இளங்கோ , மாநில பொதுச் செயலாளர்கள் திரு.மோகன் குமார் , திரு.லட்சுமி நாராயணன் , மாநில துணைத் தலைவர்கள் திரு. ரத்தனவேல், திருமதி ஜெயலட்சுமி , மாநில செயலாளர் திரு புகழேந்தி , திருமதி கோகிலா , நகர மாவட்ட தலைவர் திரு கிருஷ்ணராஜ் , மாநில அணி தலைவர்கள், பிரிவு அமைப்பாளர்கள் , மாவட்டத் தலைவர்கள் , தொகுதி தலைவர்கள் , மற்றும் அனைத்து பரிவார அமைப்பின் நிர்வாகிகள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp