பத்திரிகை செய்தி
புதுச்சேரி மாநிலம், இலாசுப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில், திமுக மூத்த முன்னோடி, கலைமாமணி திருஞானம் எழுதிய வரலாற்றில் கலைஞர் தொடர் நூல் பாகம்–3ன் வெளியீட்டு விழா நீடராஜப்பர் வீதியில் உள்ள தென்றல் ஹாலில் இன்று காலை 11.00 மணிக்கு நடந்தது.
இலாசுப்பேட்டை தொகுதி செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். ராஜ்பவன் தொகுதி செயலாளர் மோகன் வரவேற்று பேசினார்.
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் முனைவர் சபாபதி மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வரலாற்றில் கலைஞர் தொடர் நூல் பாகம்–3 என்ற நூலை வெளிட்டு, சிறப்புரை ஆற்றினார். திமுக அமைப்பாளரும், மேனாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் நூலினைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கலைமாமணி சீனு. வேணுகோபால் நூல் அறிமுகவுரை ஆற்ற, புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் ரவிக்குமார், கலைமாமணி கோவிந்தராசு ஆகியோர் நூல் மகிழ்வுரை வழங்கினர்.
நூலாசிரியர் கலைமாமணி திருஞானம் ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து நூலாசிரியர் திருஞானம் மற்றும் அவரது துணைவியார் தனலட்சுமி திருஞானம் ஆகியோருக்கு மாநில திமுக சார்பில் பொன்னாடை அணிவித்தும், பொழ்கிழி வழங்கியும் கவுரவிக்கப்பட்டது.
இந்த விழாவில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், தங்கவேலு, கோபாலகிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் வடிவேல், சக்திவேல், நடராஜன், பாண்டு அரிகிருஷ்ணன், சக்திவேல், இளஞ்செழியப்பாண்டியன், மணிகண்டன், சிவக்குமார், ஆறுமுகம், சவுரிராஜன், ராதாகிருஷ்ணன், சத்தியவேலு, இந்திரா நகர் தொகுதி பசுபிக் சங்கர், பொறிஞர் பாலசுப்ரமணியன், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு, அணிகளின் அமைப்பாளர்கள் செந்தில்முருகன், அங்காளன், அண்ணா அடைக்கலம், சீனு. மோகன்தாசு, டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ், வீரய்யன், கோதண்டபாணி, சிவசங்கர், காயத்ரி, சுமதி, முகம்மது ஹாலிது, அணித் தலைவர் சந்திரகலா, துணைத் தலைவர்கள் குரு (எ) சண்முகசுந்தரம், ராஜேஷ், பிரியதர்ஷினி, துணை அமைப்பாளர்கள் அன்பழகன், தேவேந்திரன், சிவதாசன், எழிலரசன், தாமரைக்கண்ணன், தர்மன், அஜிபாஷா, ராமு, ரமேஷ், சிவா, ஜோசப் பிரான்சிஸ், பாலு, தொகுதி நிர்வாகிகள் எம்.எஸ். முரளி, ஸ்ரீஹரி, சசிகுமார், கருணாகரன், முத்து, அகிலன், கிரி, நெல்சன், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…