August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

360 மனுக்கள் பெற பெற்ற நிலையில் மேல் நடவடிக்கைகளுக்கு உத்தரவு..

ஈரோடு. ஆகஸ்ட் 25

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 360 மனுக்கள் பெறப்பட்ட இந்த நிலையில் மேல் நடவடிக்கைகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் திங்கள் கிழமை பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் நேற்று பொதுமக்களுக்கான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொண்டு வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.

நேற்று நடந்த கோட்டத்தில் இவ்வாறு வரப்பெற்ற 360 மனுக்களில், வீட்டுமனை பட்டா, இலவச வீட்டு மனை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதைவைகள் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை போன்ற மனுக்களும்.

தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை வசதி சாக்கடை வசதி தெரு விளக்கு வசதி உள்ளிட்ட உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேவையான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ச. கந்தசாமி உத்தரவிட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள், உதவி திட்டம் சமூக நீதி துறையின் சார்பில் வழங்கப்படும் உதவி திட்டங்கள் மூலம் பல்வேறு நபர்களுக்கு ஆட்சியர் கந்தசாமி நலத்திட்டங்களை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.