E-Paper 20-01-26 1 min read Facebook WhatsApp Post navigation Previous 19-02-26Next புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கைது!புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று நடத்திய சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை முன்னாள் ஊழியர்கள், இன்று (ஜனவரி 20) காலை அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். கடந்த 2023-25 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் மற்றும் ரூ. 10,500 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, போராட்டக்காரர்கள் அனைவரும் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சட்டசபையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.காவல்துறை நடவடிக்கை:போராட்டக்காரர்கள் தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட மறுத்த நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. More Stories 1 min read E-Paper 01-06-26 1 min read E-Paper 15-05-26 1 min read E-Paper 10-05-26
More Stories
01-06-26
15-05-26
10-05-26