இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதி N.R. காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை சார்பாக “கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர்” அவர்களின் 124 பிறந்த நாளை போற்றும் வகையில் நமது சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சப்தகிரி V.P.சிவக்கொழுந்து அவர்கள் தலைமையில் அன்னாரது உருவப்படத்திற்கு மலர் தூவியும், இனிப்புகள் வழங்கியும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஜாமன்ரி பாக்ஸ் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் திரு. V.P.S.ரமேஷ்குமார் அவர்கள் செய்திருந்தார். உடன் ஊர் முக்கியஸ்தர்களும், கட்சி நிர்வாகிகளும், மகளிர் அமைப்பினரும், ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகளும், மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்